மாலியில் அரசியல் குழப்பம்: ஜனாதிபதிக்கு எதிராக திரண்ட மக்கள்!

மாலி ஜனாதிபதியை பதவிவிலக வலியுறுத்தி நேற்று (19) தலைநகரில் பிரமாண்ட போராட்டம் இடம்பெற்றது.

75 வயதான ஜனாதிபதி இப்ராஹிம் பௌபக்கர் கீற்றாவை பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலிறுத்தி வருகின்றன. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கிய “ஜூன் 5 இயக்கம்” இந்த போராட்டங்களை ஒழுங்கமைத்து வருகிறது.

நேற்றும் தலைகர் பமாகோவில் பெருமளவான மக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் அதிகரித்து வரும் அமைதியின்மை, பொருளாதா விவகாரங்களால் ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்தி அதிகரித்துள்ளது.

அங்கு முக்கிய அரசியல் நட்சத்திரமான வளர்ந்து வரும் மதத்தலைவர் மஹ்மூத் டிக்கோ இந்த போராட்டங்களை வழிநடத்துகிறார்.

அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் இணைந்த குழுக்கள், இனப் போராளிகள் மற்றும் மாநில, பிராந்திய மற்றும் சர்வதேச சக்திகள் – தெற்கில் துவாரெக் பிரிவினைவாதிகள் என மாலி குழப்பங்களின் கூடாரமாகியுள்ளது. 2012 இல் நாட்டின் ஜனாதிபதியாக தெரிவான கீற்றா, 2018 இல் மீண்டும் அடுத்த 5 ஆண்டுக்கு ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.

நேற்று நகர மத்திய சதுக்கத்தில் ஒன்றுகூடிய மக்கள் அரசுக்கும், ஜனாதிபதிக்கும் எதிரான கோசங்களை எழுப்பினர்.

போராட்டக்காரர்களை சமரசப்படுத்த ஆசிரியர்களின் நீண்டகால ஊதிய சர்ச்சையை தீர்த்தமை உள்ளிட்ட சில நடவடிக்கைகளை ஜனாதிபதி எடுத்ததுடன், முழுமையான சீர்திருத்தத்தை நாட்டில் ஏற்படுத்துவதாக உறுதியளித்தபோதும், போராட்டங்கள் கட்டுப்பாட்டில் வரவில்லை.

மாலியில் கூர்மையான அரசியல் பிளவு அண்டை நாடுகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. மேற்கு ஆபிரிக்க நாடுகளான புர்கினோ பாசோ, நைஜரில் ஏற்கனவே கொந்தளிப்பான நிலைமையுள்ள சமயத்தில், மாலியின் போராட்டங்களை முன்னுதாரணமாக கொண்டு, அங்கும் குழப்பங்கள் ஏற்படலாமென்ற அச்சம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here