நேற்று அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் பற்றிய விபரம்!

இலங்கையில் நேற்று (19) 3 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்க 1,950 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று அடையாளம் காணப்பட்ட 3 பேரும் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பி, தனிமைப்படுத்தல் மையங்களில் தங்கியிருந்தவர்கள். இந்தியா, டுபாய், குவைத் ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களே இவர்கள்.

இதேவேளை, நேற்று 25 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,446 ஆக உயர்ந்துள்ளது. 493 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here