ஓடும் பேருந்துக்குள் 12 பேரின் மத்தியில் இளம்பெண் பலாத்காரம்!

உத்தரப்பிரதேசத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

உத்திரப்பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் இருந்து நொய்டாவுக்கு 25 வயது பெண் தனது இரு குழந்தைகளுடன் கணவரை பார்க்க புறப்பட்டு உள்ளார்.

நொய்டாவுக்கு ஏசி ஸ்லீப்பர் பேருந்தில் அவருக்கு கடைசி இருக்கை ஒதுக்கப்பட்டது. ஏசி பேருந்தில் கிட்டத்தட்ட 12க்கும் மேற்பட்டவர்கள் அவருடன் பயணம் செய்துள்ளனர்.

இரவு 2 மணி அளவில் லக்னோவிற்கும் மதுராவிற்கும் இடையே பேருந்தில் உள்ள இரு ஓட்டுநரில் ஒருவர் அப்பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஏதேனும் சத்தமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளார். மேலும் 2 பேர் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து கவுதம் புத்தா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது குறித்து போலீசார் கூறும் போது லக்னோவுக்கும், மதுராவுக்கும் இடையே பேருந்து சென்றுகொண்டு இருக்கும் போது இரவு 2 மணியளவில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.பேருந்தின் கடைசி சீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். சத்தமிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியுள்ளனர்.

குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஓட்டுநர்களில் ஒருவரை கைது செய்யப்பட்டு உள்ளார். அதே நேரத்தில் இந்த வழக்கு தொடர்பாக மேலும் இரு நபர்களைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

குற்றவாளிகள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here