வெளிநாடுகளில் பணியாற்றும் 21 இலங்கையர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு!

வெளிநாட்டில் பணியாற்றும் 21 இலங்கையர்கள் இதுவரை கொரோனா தொற்றிற்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

மார்ச் மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கை பணியாளர்களான 21 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை மத்திய கிழக்கு, கிழக்காசியாவை சேர்ந்த 17  நாடுகளில் தொழில் நிமித்தம் சென்ற 2,000 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 17 நாடுகளில் இருந்து 45,000 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here