27ஆம் திகதி முதல் திரையரங்கங்கள் திறக்கப்படும்!

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளும் மீளத் திறக்கப்படவுள்ளன.

நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளும் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் சுகாதார ஆலோசனைகளின் படி மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக கலாச்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சம் காரணமாக கடந்த சில மாத காலமாக, நாட்டிலுள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தன.

இந்நிலையில், திரையரங்குகள் திறக்கப்பட்டதன் பின்னர், பொது மக்கள் முறையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறும் கலாச்சார அமைச்சு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here