தலவாக்கலையில் மரம் நடுகை!

உலக சுற்றாடல் தினத்தையொட்டி தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் வனப்பாதுகாப்பு பிரிவு ஏற்பாடு செய்த இலங்கைக்கே உரித்தான மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு தலவாக்கலை ஹொலிரூட் தோட்டத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஹேலீஸ் கம்பனியின் நிர்வாக பணிப்பாளர் ரொசான் ராஜதுரை  மரக்கன்றுகளை நாட்டினார்.

தலவாக்கலை கம்பனி இயக்குனர் நிஷாந்த அபேசிங்க,வனபாதுகாப்பு சிரேஷ்ட முகாமையாளர் பண்டார தசாநாயக்க  மற்றும் தலவாக்கலை பெருந்தோட்ட கம்பனியின் சகல தோட்ட அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here