இலங்கையிலிருந்து சென்றவருக்கு கொரோனா: அதே விமானத்தில் திருப்பி அனுப்பியது டோஹா!

இலங்கையிலிருந்து சென்ற விமானத்திலிருந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரை இலங்கைக்கே திருப்பி அனுப்பியுள்ளது கட்டார்.

இந்தியாவின் மும்பையிலிருந்து 69 இந்தியர்கள் நேற்று முன்தினம் (17) மாலை இண்டிகோ சிறப்பு விமானம் மூலம் 69 இந்தியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களில் 54 பேர், கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள இந்திய கப்பலொன்றில் பணியாற்ற வந்தவர்கள். எஞ்சிய 15 பேரும் கட்டார் விமானத்தில் டோஹாவிற்கு பயணித்தனர்.

அவர்கள் டோஹா விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்ட போது, அவர்களில் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அதே விமானத்தில் அவர் இலங்கைக்கே திருப்பியனுப்பப்பட்டார்.

இதையடுத்து கட்டாரிற்கு சொந்தமான கியூஆர் 668 இலக்க விமானத்தில் அதிகாலை 1.35 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சர்வதேச விமானச் சட்டத்தின்படி, சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடைய பயணிகள் அவர்கள் புறப்பட்ட விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்த இந்திய பயணி இலங்கைக்கு அனுப்பப்பட்டார்.

இருப்பினும், அவரை இந்தியாவின் மும்பைக்கு திருப்பி அனுப்ப இண்டிகோ விமானம் இல்லாததால், நோயாளர் காவு வண்டி மூலம் கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here