அங்கஜன் கப்சா: ரவி கருணாநாயக்கவிற்கு அமைச்சு?

0

அரசாங்கத்தில் இருந்து விலகாத ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியின் 17 பேர் நேற்றிரவு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

விஜித் விஜயமுனி சொய்சா, காதர் மஸ்தான், அங்கஜன் இராமநாதன் உட்பட சிலர் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை.

இதேவேளை, புதிய அமைச்சரவை பதவியேற்கும் போது ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு மீண்டும் அமைச்சு பதவி வழங்கப்பட உள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டு அமைச்சராக ரவி கருணாநாயக்க நியமிக்கப்படலாம் என அந்த தகவல்கள் கூறுகின்றன.

நிதியமைச்சராக பதவி வகித்த ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் பிணை முறி விவகாரத்தில் குற்றம் சுமத்தப்பட்டதை அடுத்து நிதியமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து வெளிவிவகார அமைச்சராக பதவியேற்றார்.

பிணை முறி தொடர்பாக விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவில் ரவி கருணாநாயக்கவின் பெயர் பேசப்பட்டதை அடுத்து அவர் வெளிவிவகார அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here