காதலரை மணக்கிறார் சுபா பூஞ்சா!

வரும் டிசம்பர் மாதம் காதலர் சுமந்தைத் திருமணம் செய்யவுள்ளதாக நடிகை சுபா பூஞ்சா தெரிவித்துள்ளார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த சுபா பூஞ்சா, 2004 இல் மச்சி என்கிற தமிழ்ப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். இதன்பிறகு மூன்று தமிழ்ப் படங்களில் நடித்துள்ள சுபா பூஞ்சா, ஏராளமான கன்னடப் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தனது காதலரும் தொழிலதிபருமான சுமந்த் பில்லாவாவைத் திருமணம் செய்யவுள்ளதாக சுபா அறிவித்துள்ளார். ஊரடங்கு முடிந்தபிறகு டிசம்பரில் எனது காதலரைத் திருமணம் செய்துகொள்வேன் என சுபா பூஞ்சா, இன்ஸ்டகிராமில் தெரிவித்து சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here