வாகனத்திற்குள் சூட்சுமமாக கஞ்சா பதுக்குமிடம்… பாதுகாப்பு கார்: வடக்கில் சிக்கிய கஞ்சா கடத்தல்காரர்கள்!

வாகனத்தின் அடிச்சட்டகத்துக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு கடத்திச் செல்லப்பட்ட 20 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்யதுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளை நோக்கி கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொலிசார் 20 கிலோ கேரள கஞ்சாவினை கைப்பற்றியதுடன், அதனை கடத்திச் செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கப் ரக வாகனத்தை மீட்டுள்ளனர்.

குறித்த கடத்தல்நடவடிக்கை பொலிசாரை திசைதிருப்பும் விதமாக சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், கஞ்சா வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்திற்கு பாதுகாப்பை வழங்கும் நோக்குடன் அதற்கு முன்பாக கார் ஒன்றினையும் கடத்தல் காரர்கள் செலுத்தி சென்றதாக பொலிசாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கைது நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடுவின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரணித் திசாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.

சம்பவத்தில் பொலநறுவை பகுதியை சேர்ந்த 31 வயது இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here