பச்சைப்பசும் கிளிநொச்சிமரம் நடுகை செயற்றிட்டம் ஆரம்பம்

பச்சைபசும் கிளிநொச்சிஎனும் தலைப்பில் மரம் நடுகை செயற்றிட்டம் ஒன்று நேற்று (17) கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தினரால் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பூங்காவனச் சந்தியிலிருந்து பன்னங்கண்டிவரை முதற்கட்டமாக ஒரு கிலோமீற்றருக்கு வீதியின் இரு புறமும் சுமார் 400 தேக்குமரக் கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோத மரம் காடழிப்புஎன்பவற்றால் சூழல் மிக மோசமாக பாதிப்படைந்து வருகின்ற சூழலில் கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகத்தின் இச் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சூழலை நேசிக்கின்றவர்களின் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

அந்தவகையில் நேற்று காலை பத்து மணிக்கு ஆரம்பிக்கப்பட்டுள்ள முதற்கட்டமான பச்சைப்பசும் தரம் நடுகை செயற்றிட்டத்தை கிளிநொச்சி மாவட்ட அரசஅதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் ஆரம்பித்து வைத்துள்ளார்.

இச் செயற்றிட்டத்தின் தொடர்ச்சிவரும் காலங்களில் தொடராக இடம்பெறும் எனவும், இது தனியே ஒரு தரப்பினால் மட்டும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியாது என்பதனால் நீர்ப்பாசனத் திணைககளம், வனவளத் திணைக்களம், பிரதேச சபை, பிரதேச செயலகம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மின்சார சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகிய திணைக்களுடன் இணைந்து கிளிநொச்சி நகர றோட்டறிக் கழகம் இச் செயற்றிட்டத்தை முன்னெடுத்துள்ளது.

றோட்டறிக் கழகத்தின் தலைவர் அ.பங்கையற்செல்வன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அரசஅதிபர், பிரதேசசெயலர், பொலீஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here