சுகாதார பாதுகாப்பிற்கு முன்னுரிமையளித்து தேர்தல்: கோட்டா உறுதி!

சுகாதார பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கான சூழலை ஏற்படுத்தி தருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களிடையே நேற்று இடம்பெற்ற (17) கலந்துரையாடலின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் அதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி தேர்தல் நடக்கவிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

நேற்று நடைபெற்ற கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்களுக்கு சுகாதாரப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கும் அதே வேளையில், சுதந்திரமான, நியாயமான தேர்தலை நடத்த உறுதியளித்தார்.

பொதுமக்கள் போதியசுகாதார விழிப்புணர்வுடன் இருப்பதால் தேர்தலை நடத்துவதில் பிரச்சனையிருக்காது.

அரசாங்கம் கடந்த சில மாதங்களாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டது. இது தேர்தலை இலக்காக கொண்டதல்ல. மக்களை பாதுகாப்பதே இதன் நோக்கம்.

தேர்தலுக்காக முகம் கொடுக்க இராணுவம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளலாம். சுகாதார பாதுகாப்புடன் தேர்தலை நடத்துவது பற்றி, சுகாதார திணக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது என ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த அறிவுறுத்தல்களை வர்த்தமானியிடுவதன் அவசியத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here