பிரிட்டன் பிரதமர் பயணம் செய்த கார் விபத்து!

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பயணம் செய்த கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. நேற்று (17) நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் இல்லை.

நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பின் பொரிஸ் ஜோன்சன், அங்கிருந்து காரில் புறப்பட்டார். அப்போது, ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், பிரதமரின் காரை நோக்கி ஓடி வந்தார். அவரை தடுக்கும் முயற்சியில், பிரதமரின் பாதுகாப்பு வாகனங்களில் வந்தவர்கள் முயற்சித்தனர்.

அப்போது, பாதுகாப்பு வாகனம் ஒன்று, பிரதமரின் கார் மீது மோதியது. எனினும், பிரதமரின் காருக்கு பாரதூரமான பாதிப்பு எதுவும் நேரவில்லை. பிரதமரும் காயமின்றி தப்பினார். ஆர்ப்பாட்டக்காரரை கைது செய்த பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here