பொலிஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானவருக்கு 200,000 ரூபா இழப்பீடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

பொலிஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக அடிப்படை மனித உரிமை மீறல் தாக்கல் செய்த முன்னாள் இராணுவச் சிப்பாய்க்கு, 200,000 ரூபா இழப்பீடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

டான் சமந்த பெரேரா என்ற முன்னாள் சிப்பாய் இந்த மனுவைதாக்கல் செய்தார்.
அவர் இராணுவத்தை விட்டு வெளியேறி, ஆயுர்வேத மருந்தகத்தில் தொழிலாளியாக பணிபுரிந்துவ்தார். இதன்போது, காரணமின்றி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டதாக அவர், பின்னர் 2013இல் இந்த அடிப்படை உரிமைவை  தாக்கல் செய்தார்.

குருநாகல், ஹெட்டிபொலவை சேர்ந்த முன்னாள் சிப்பாயை, கைத்தொலைபேசியுடன் தொடர்புடைய குற்றமொன்றிற்காக பொலிசார் கைது செய்ததாக குறிப்பிட்டிருந்தனர்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் பிரியந்த ஜெயவர்தன, எஸ்.துரைராஜா, டெஹிதெனிய ஆகியோர் அடங்கிய ஆயம் இந்த வழக்கை விசாரணை செய்தது.

மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் இந்த தாக்குதல்கள் நடந்ததை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. மனுதாரருக்கு எதிரான ஆதாரங்களை வெளிக்கொணர பொலிசார் தவறிவிட்னர் என்பது உச்ச நீதிமன்றத்தில் தெரியவந்தது.

இதையடுத்து, மனுதாரருக்கு 200,000 ரூபா இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. இதில், அதன்படி, ஹெட்டிnபால பொலிஸ் நிலைய முன்னாள் ஓ.ஐ.சி
சுமனசிறி மற்றும் பொலிஸ் நிலைய குற்றப்பிரிவு ஓ.ஐ.சியாக பணியாற்றிய சப் இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலா 50,000 ரூபாவும், அரசு 100,000 இலட்சம் ரூபாவும் வழங்க உத்தரவிடப்பட்டது.

கொடூரமான சித்திரவதைக்கு எதிராக சர்வதேச உடன்படிக்ககளில் இலங்கை கையெழுத்திட்டுள்ள நிலையில் பொலிஸ் காவலில் உள்ள சந்தேக நபர்கள்
இதுபோன்ற துன்புறுத்தல்களை எதிர்கொள்வதை தடுப்பதற்கான நடைமுறை தீர்வுகளை அரசாங்கம் கவனிக்க வேண்டும் என்று நீதிபதி பிரியந்த ஜெயவர்தன வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here