ஆசன எண்ணிக்கையை விட அதிக பயணிகள் ஏற்றப்பட்டால் உடனே அழையுங்கள்!

சில தனியார் பஸ் வண்டிகள், ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளை தெரிவிக்க 1955 எனும் ஆணைக்குழுவின் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா தெரிவித்தார்.

இது தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள், மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் பரவல் நிலையைத் தொடர்ந்து, பயணிகள் போக்குவரத்து பஸ் வண்டிகளில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here