தாய், மகனை கழுத்து நெரித்து கொன்றவருக்கு மரணதண்டனை!

கம்பஹா, அத்தனகல்ல பகுதியில் 17 வருடங்களின் முன்னர் இளம் தாயையும், மகனையும் கழுத்து நெரித்து கொன்றதை, குற்றவாளி நீதிமன்றத்தில் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து அவருக்கு கம்பஹா உயர்நீதிமன்றம் நேற்று மரணதண்டனை விதித்தது.

நிட்டம்புவ பகுதியை சேர்ந்த 30 வயதான தாய், 4 வயது மகனை அவர் கழுத்து நெரித்து கொன்றிருந்தார். சொத்துக்களை கொள்ளையிட இந்த கொலை நடந்தது.

2003 மே 5 ஆம் திகதி அல்லது அதற்கு சற்று முன்னரான காலப்பகுதியில் இந்த கொலை நடந்தது.

நஜட்டம்புவவை சேர்ந்த மெடகெதர நவரத்ன பண்டா (45) என்பவரே இந்த கொலையை செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here