நாங்கள் மற்றவர்களைப் போல இல்லை!

நாங்கள் மற்றவர்களை வேதனைப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ , அதை செய்வோம் இதை செய்வோம் என பொய் சொல்லி வாக்கு கேட்பவர்கள் இல்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தமிழர் விடுதலை கூட்டணியின் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நேற்று (16) நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே ஆனந்த சங்கரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் மற்றவர்களை வேதனைப்படுத்தியோ, அவமானப்படுத்தியோ, அதை செய்வோம் இதை செய்வோம் என பொய் சொல்லி வாக்கு கேட்பவர்கள் இல்லை.

நாங்கள் சரியாக சிந்தித்து செயல்பட வேண்டும். நாங்கள் பின்பற்றும் தலைவர்கள் தங்களுக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை என மக்களுக்காக ஒன்றுபட வேண்டும் என ஒன்றுபட்டவர்கள்.

இப்போது உள்ளவர்கள் பிரிந்து நின்று மக்களையும் பிரித்தாள்கிறார்கள். எவரிடமும் ஒற்றுமை இல்லை. எங்களுடைய இலட்சியம் எங்கள் தலைவர்களின் இலட்சிய பாதையில் பயணிப்பதே எமது இலக்கு.

ஏக பிரதிநிதித்துவம் என்றால் எல்லோரும் ஒன்றாக நிற்பது. தற்போது யார் ஒன்றாக நிற்கிறார்? பலவாக பிரிந்து நிற்கிறார். பல கட்சிகள் ஏன் தோற்றம் பெற்றது என தெரியவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here