சீனாவின் தாக்குதலில் 20 இந்திய இராணுவத்தினர் பலி!

லடாக் மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் பலி என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கில் படைகளை குறைக்கும் நடவடிக்கையின் போது சீன ராணுவம் அத்துமீறியது. அப்போது சீன ராணுவத்துடனான மோதலின் போது இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் வீரர்கள் 2 பேர் வீரமரணம் அடைந்தனர். 3 பேர் வீரமரணத்தை தொடர்ந்து லடாக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இந்திய – சீன ராணுவ உயர் அதிகாரிகள் சந்தித்து பேசி வருகின்றனர்.

இதில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரத்தைச் சேர்ந்தவரும் 22 வருடங்களாக ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வந்தவருமான பழனி என்பவரும் வீரமரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் சீன ராணுவத்தின் தரப்பிலும் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் லடாக் மோதலில் இந்திய தரப்பில் 20 பேர் பலி என ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. மேலும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் உயிரிழப்பு அதிகரிக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here