உமா ஓயா திட்டப்பணிக்கு வந்த 4 ஈரானியர்களிற்கு கொரொனா!

இலங்கையில் கொரோனா வைரஸின் தாக்கத்திற்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1913 ஆக உயர்ந்துள்ளது. இன்று 9 பேர் கொரொனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் 4 பேர் ஈரானியர்கள். 5 பேர் கடற்படையினர்.

உமா ஓயா அபிவிருத்தி திட்டத்திற்காக இலங்கைக்கு வந்த ஈரானிய தொழில்நுட்ப அதிகாரிகள் நால்வரே கொரோனா தொற்றிற்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பி.சி.ஆர் சோதனைகள் நான்கு நபர்களுக்கும் வைரஸ் பாதித்திருப்பதை உறுதி செய்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு இயக்குநர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

உமா ஓயா அபிவிருத்தி திட்டத்தை முடிக்க ஈரானில் இருந்து சிறப்பு விமானத்தில் மொத்தம் 85 தொழில்நுட்ப வல்லுநர்கள் இலங்கைக்கு வந்தனர். நாட்டை வந்தடைந்ததும் அவர்கள் பி.சி.ஆர் சோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். பி.சி.ஆர் முடிவுகள் கிடைக்கும் வரை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 1371 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். 527 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here