வீதியை விட்டு விலகிய எரிபொருள் பாரவூர்தி: ஹட்டன்-கொழும்பு பிரதான வீதி 3 மணித்தியாலம் முடக்கம்!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதி கினிகத்தேன பிடவல பகுதியில் பெற்றோல் கொள்கலன் பார ஊர்தி பாதையை விட்டு விலகியதில், ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் 3 மணித்தியாலம் போக்குவரத்து தடைப்பட்டது.

இன்று நண்பகல் 12.05 மணியளவில் கொள்கலன் பார ஊர்தி பிடவல பிரதான பாதை வளைவில் பாதையை விட்டு விலகி பாதையின் குறுக்கே நின்றுக்கொண்டது.

இதனால் பாதையின் இருபக்கமும் போக்குவரத்து தடைப்பட்டது.

கினிகத்தேன பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகைத்தந்து போக்குவரத்து நெரிசலை வழமைக்கு கொண்டு வந்தனர்.

இந்நிவையில், மாலை 3.15 மணியளவில் கொள்கலன் மீட்டெடுக்கப்பட்டது.

பாதை இருபக்கமும் 5 கிலோ மீற்றர் தூரம் வரை வாகன நெரிசல் ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here