பலே கில்லாடி: அர்ஜான் அலெக்ஸாண்டர் என பெயரை மாற்றிய அர்ஜூன் மகேந்திரன்!

இலங்கை வரலாற்றில் பெரும் மோசடிகளில் ஒன்றாக கருதப்படும் மத்திய வங்கி பிணைகள் முறி மோசடி வழக்கில் முதலாவது பிரதிவாதியான அர்ஜூன் மகேந்திரன், பெயரை மாற்றிக் கொண்டு சிங்கப்பூரில் பதுங்கியிருந்த விவகாரம் இன்று மேல் நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டது.

அர்ஜூன் மகேந்திரன் பெயரை மாற்றிக் கொண்டு பதுங்கியிருந்ததாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபாலவும் அண்மையில் தெரிவித்திருந்தார்.

அவர் தனது பெயரை அர்ஜான் அலெக்ஸாண்டர் என மாற்றிக் கொண்டதாக, மூவர் அடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு இன்று அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here