ஜனாதிபதி- தேர்தல்கள் ஆணைக்குழு நாளை சந்திப்பு?

தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்குமிடையில் நாளை (17) சந்திப்பு இடம்பெறலாமென தெரிகிறது.

ஜனாதிபதியுடனான சந்திப்பிற்கு நேரம் கோரியுள்ளதாகவும், அனேகமாக நாளை சந்திப்பு இடம்பெறலாமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின்3 உறுப்பினர்களும், அதன் செயலாளரும் சந்திப்பில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் நாளை சந்திப்பை நடத்த தேர்தல் ஆணைக்குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here