சிறை அதிகாரியின் வீட்டு வாசலில் துப்பாக்கி ரவைகள்!

பூசா சிறைச்சாலை அதிகாரியொருவரின் வீட்டுக்கு முன்பாக இனம்தெரியாத நபர்கள் 5 துப்பாக்கி ரவைகளை வீசிவிட்டு சென்றுள்ளனர். அந்த ரவைகளில் சிறைச்சாலை அதிகாரியின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

நேற்று அவர் கடமைக்கு புறப்பட தயாராகி வீட்டு கதவை திறந்தபோது, வாசலில் ரி56 ரக துப்பாக்கி ரவைகள் காணப்பட்டன.

அண்மையில், பூசா சிறைச்சாலையில் கஞ்சிபானை இம்ரானின் சிறைக்கூடத்தில் சோதனை நடத்தியதில் இந்த அதிகாரி முக்கிய பங்காற்றியிருந்தார். இந்த சோதனையின் போது, 2 கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டிருந்தன.

இதனால் ஆத்திரமடைந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இந்த மிரட்டலை விடுத்திருக்கலாமென கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here