பாகிஸ்தானில் கைதான 2 இந்திய தூதரக அதிகாரிகளும் விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்றனர்!

பாகிஸ்தான் தலைகர் இஸ்லாமாபாத்தில் காணாமல் போனதாக கூறப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகள் இருவரும், நேற்று மாலை தூதரகம் திரும்பியுள்ளனர்.

அவர்கள் பயணம் செய்த வாகனம் விபத்தில் சிக்கியதையடுத்து, பிரதேசவாசிகள் அவர்களை வளைத்து பிடித்து,“இரண்டு தட்டுதட்டி“ பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்று திங்கள்கிழமை தூதரக அதிகாரிகள் இருவர் காரில் சென்றதாகவும், இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாக அவர்கள் தொடர்பில் இல்லையென பாகிஸ்தான் அரசிற்கு, இந்திய தூதரகம் தகவல் கொடுத்தது.

த்விமு பிரம்மா மற்றும் போல் செல்வதாஸ் ஆகியோரே அந்த இரண்டு ஊழிர்களுமாவர். இரண்டு அதிகாரிகளும் இராஜதந்திரிகள் அல்ல.

அவர்கள் பயணம் செய்த கார் ஒரு பாதசாரியை மோதியது. அவர்கள் அங்கிருந்த தப்பியோட முயன்றனர். எனினும், பொதுமக்கள் அவர்களை வளைத்துப் பிடித்தனர்.

கைதானவர்களில் ஒருவர் கள்ள நாணயம் வைத்திருந்ததாக பாகிஸ்தான் பொலசார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here