போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக கூறி நற்பெயரை கெடுத்து விட்டாராம்: யஷ்மின் சூகா மீது வழக்கு தொடர தயாராகிறார் அரச புலனாய்வுத்துறை பிரதானி!

சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் பணிப்பாளர் யஷ்மின் சூகா வெளியிட்ட அறிக்கையால் தனது நற்பெயருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இலங்கை அரச புலனாய்வு சேவையின் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே சட்ட நடவடிக்கையில் இறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தான் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக பொய்யாகக் கூறி அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும், அது அவரது சொந்த வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் சுரேஷ் சலே கூறியுள்ளார்.

பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்கே படுகொலை செய்யப்பட்டதில் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயும் தொடர்புபட்டிருப்பதாக யஷ்மின் சூகா தெரிவித்திருந்தார்.

இருப்பினும், சம்பவம் நடந்த நேரத்தில் தான் இலங்கையிலேயே இருக்கவில்லை, இந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அரச புலனாய்வு சேவையின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கூறுகிறார்.

அதன்படி, யஷ்மின் சூக்கா வெளியிட்ட அறிக்கையை 14 நாட்களுக்குள் சரிசெய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால், யஷ்மின் மீது ஒரு பில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என சுரேஷ் சலே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத் தளபதி ஒரு சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அதிகாரிக்கு எதிராக ஆட்சேபனை எழுப்புவது இதுவே முதல் முறை.

ஒரு தன்னார்வ தொண்டு செயற்பாட்டாளராக, சர்வதேச அரங்கில் இலங்கைக்கு எதிராக பலமுறை குரல் எழுப்பிய ஒரு பெண்ணாக யஷ்மின் சுகா கருதப்படுகிறார். அவர் முன்னாள் ஐ.நா மனித உரிமை அதிகாரி ஆவார். இலங்கை தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் ஆணையத்தால் தயாரிக்கப்பட்ட தாருஸ்மன் அறிக்கைக் குழுவின் உறுப்பினராகவும் யஷ்மின் சூகா இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here