வடமராட்சி கிழக்கில் தென்னிலங்கை மீனவர்களின் அத்துமீறலிற்கு எதிராக போராட்டம்!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் தென் இலங்கை மீனவர்கள் அத்துமீறி கடல் அட்டை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மீனவர்கள் சங்கங்களின் சமாசத்தால் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது.

மீனவர்கள் தமது கடல் வளங்கள் மீன் வளங்கள் என்பன இதனால் அழிக்கப்படுவதாக குற்றம் சுமத்தினர். இதில் மீனவர் சமாசத்தால் மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here