கள்ளக்காதலியை சுட்டியலால் அடித்துக் கொன்றுவிட்டு தூக்கு மாட்டிய கறிக்கடை வியாபாரி!

கோவை காளப்பட்டி நேரு நகரில் உள்ள ஒரு வீட்டில், பெண்ணை கொலை செய்துவிட்டு, ஒரு ஆண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

பீளமேடு போலீஸாருக்குத் கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்த்தபோது, அந்தப் பெண் ரத்த வெள்ளத்திலும் ஆண் தூக்கிட்டும் உயிரிழந்த நிலையில் இருந்தனர்.

பின்னர், இருவரது உடலையும் மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அவற்றை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “நேரு நகரைச் சேர்ந்த திலகவதி-சக்திவேல் தம்பதிக்கு இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். இதனிடையே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திலகவதி, தன்னுடைய கணவர் சக்திவேலிடம் பிரிந்து, மகள்களுடன் வாடகை வீட்டில் தங்கி வந்தார்.

அதே பகுதியில் சிக்கன் கடை நடத்தி வந்தவர் பத்மநாபன். பத்மநாபனும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். திலகவதி, பத்மநாபனின் சிக்கன் கடைக்குச் செல்லும்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதுநாளடைவில், கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த நிலையில், சக்திவேலை விவாகரத்து செய்துவிட்டு, தன்னுடன் வாழுமாறு திலகவதியிடம் பத்மநாபன் நீண்ட நாள்களாக கூறிவந்துள்ளார். ஆனால், குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதால் அது முடியாது என்று திலகவதி கூறியுள்ளார். இதனால், அவர்கள் இருவருக்குமிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு, திலகவதியை அருகில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்புக்கு அழைத்துச் சென்று, சுத்தியலால் அடித்துக் கொன்றுள்ளார். இதில், திலவகதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாக, ஒரு புடவை மூலம் தூக்கி மாட்டிக் கொண்டு பத்மநாபனும் உயிரிழந்துவிட்டார்” என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here