தேசிய பூங்காக்கள், மிருகக்காட்சி சாலை இன்று திறப்பு!

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தேசிய மிருகக்காட்சிசாலை, தேசிய பூங்காக்கள் என்பன இன்று (15) முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய மிருகக்காட்சிசாலை, பூங்காக்கள் என்பன கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நாடு வழமைக்கு திரும்பி வரும் நிலையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேசிய பூங்காக்களிற்குள் அனுமதிக்கப்படும் நபர்களின் அளவில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருகோணமலை புறாத்தீவிற்கு நாளொன்றுக்கு 50 படகுகள் மாத்திரமே அனுமதிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here