யாழ்ப்பாணத்தை மிரட்டிய டிலு ரௌடிக்குழு தலைவன் உள்ளிட்டவர்கள் கைது!

சித்தரிப்பு படம்

யாழ்ப்பாணத்தின் பிரபல ரௌடி ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் ஏழு பேர் நேற்று (14) மாலை நாவற்குழி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டிலு என்ற பெயருடைய வாள் வெட்டுக்கு குழுவின் தலைவர் எனக் கருதப்படும் நபர் உட்பட ஏழு பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இன்று (15) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here