வெளிநாடுகளிலிருந்து 7000 பேர் நாட்டிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்!

கொரோனா தொற்றின் பின்னர் வெளிநாடுகளில் இருந்து சுமார் 7,000 பேரை நாட்டிற்கு அழைத்து வந்துள்ளதான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு திரும்ப விருப்பம் தெரிவித்து சுமார் 40,000 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளதாகஈ வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடமிருந்து தகவல் கிடைத்ததாகவும் தெரிவித்தார்.

எனினும், இனிமேல் அந்த எண்ணிக்கையாளவர்கள் நாடு திரும்புவார்கள் என தான் நினைக்கவில்லையென்றும், சுமார் 20,000 பேரளவில் நாடு திரும்பலாமென்றும் தெரிவித்தார்.

நாட்டிற்குள் தனிமைப்படுத்தல் மையங்களில் இடவசதி கிடைப்பதற்கேற்ப, வெளிநாட்டிலிருந்து மக்களை அழைத்து வரும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

இலங்கைக்கு வருபவர்களில் பலர் கொரோனா தொற்றிற்கு இலக்காகியுள்ளனர். கட்டார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இலங்கைக்குள் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here