ஓகஸ்ட் 1ஆம் திகதிக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க பரிசீலனை!

ஓகஸ்ட் 1 ஆம் திகதிக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை திறக்க அரசு பரிசீலித்து வருவதாக கைத்தொழில், ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக காட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படுவதற்கு முன்னர்,  இலங்கைக்கு வர விரும்பும் வெளிநாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களும் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

வத்தளை, நீர்கொழும்பு உள்ளூராட்சிசபை பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களுடன் பேசும்போது இதனை தெரிவித்தார்.

வௌஜிநாட்டிலிருந்து இலங்கையர்கள் அழைத்து வரப்படுவது ஓகஸ்ட் 1ஆம் திகதிக்குள் முடிக்கப்படும் என்றார். நாட்டிற்குள் தினமைப்படுத்தல் மையங்கள் கிடைப்பதற்கேற்ப நிலைமை தீர்மானிக்கப்படுகிறது. இலங்கைக்கு இன்னும் 20,000 பேர் வர உள்ளனர். ஏற்கனவே 10,000 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இந்த செயல்முறையை விரைவுபடுத்துவோம் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர், சுற்றுா பயணிகள் நாட்டுக்குள் நுழைவதில் கவனம் செலுத்தப்பட்டும் என்றார்.

“சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் நுழைவதற்கு முன்பு, அவர்கள் பி.சி.ஆர் செய்து ஒரு அறிக்கையை கொண்டு வர வேண்டும். அத்தகைய அறிக்கை இருந்தாலும், நாங்கள் இதை விமான நிலையத்தில் செய்தே, நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (எஸ்.எல்.டி.டி.ஏ) அவர்களை உன்னிப்பாக கண்காணித்து வரும். அவர்கள் எங்கு சென்றாலும் நாங்கள் அவர்களை கண்காணிப்போம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here