சிறைச்சாலைக்கு பெண்ணுறுப்பில் ஹெரோயின் மறைத்து கொண்டு சென்ற பெண்ணுக்கு ஆயுள்தண்டனை!

வெலிக்கட சிறைச்சாலைக்கு ஹெரோயின் கடத்திய பெண்ணிற்கு கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியராச்சி ஆயுள் தண்டனை விதித்துள்ளார்.

அவருக்கு வயது 60.

சந்தேகநபர் 2013 ஓகஸ்ட் 30 ஆம் திகதி சிறைச்சாலைக்கு ஹெரோயின் கடத்தியபோது கைதானார். அவரது பெண்ணுறுப்பில் 3.6 கிராம் ஹெராயின் வைத்திருந்தார். அவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 216 பக்கெட் ஹெரொயின் மீட்கப்பட்டது.

நீண்ட வழக்கு விசாரணைக்குப் பின்னர், உயர் நீதிமன்ற நீதிபதி போதைப்பொருள் வைத்திருத்தல் மற்றும் கடத்தல் குற்றச்சாட்டில் பிரதிவாதிக்கு எதிரான தீர்ப்பை அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here