சட்டவிரோத தேர்தல் பிரச்சாரங்களை இலக்கு வைத்து பொலிசார் நடவடிக்கை!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கட்அவுட்களை அகறறும் விசேட நடவடிக்கையை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.

நாடு தழுவிய ரீதியில் இன்று (14) முதல் இந்த நடவடிக்கை ஆரம்பித்தது.

தேர்தலை இலக்காக கொண்ட அனைத்து சட்டவிரோத பிரச்சார நடவடிக்கைகளையும் நிறுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனரத்ன தெரிவித்தார்.

சட்டவிரோத தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கையெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here