இந்தவார ராசிபலன்கள் (14.6.2020- 20.6.2020)

சுக்கிரன், ராகு, செவ்வாய் ஆகியோர் நன்மைகளை அளிக்க காத்திருக்கின்றனர். மனதில் உற்சாகமும் செயல்களில் நேர்த்தியும் நிறைந்திருக்கும். தள்ளிப்போன வெளியூர் பயணத்தில் திருப்பம் ஏற்படும். சிலருக்கு எதிர்பார்த்த பணஉதவி விஷயமாக நல்ல தகவல்கள் கிடைக்கும். பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். புதிய கொள்முதல் மூலமாக வியாபாரத்தில் அதிகமான வருவாய்ப் பெருக்கம் ஏற்படும். பணியை சிறப்பாக செய்து முடித்தாலும் அதில் சிலர் குறைகாண்பர். பெண்களுக்கு தந்தையின் அன்பும், ஆதரவும் உண்டு.

பரிகாரம் : அனுமன் வழிபாடு வெற்றி தரும்.

சுக்கிரன், புதன், சந்திரன் உதவி செய்யக்கூடிய அமைப்பில் உள்ளனர். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் நட்பால் ஆதாயம் பெறுவீர்கள். வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளால் லாபம் உண்டு. பிறர் மேல் இரக்கம் ஏற்பட்டு தர்மச் செயல்களை செய்வீர்கள். பூர்வ சொத்து சம்மந்தப்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்க தாமதம் ஆகலாம். தந்தையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் கவனம் தேவை. வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவு செய்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

பரிகாரம் : பெருமாள் வழிபாடு நல்வாழ்வு தரும்.

புதன், சந்திரனால் கூடுதல் நன்மை ஏற்படும். திட்டமிட்ட சுபநிகழ்ச்சிகள் தள்ளிப் போனாலும் சிறப்பாக நடைபெறும். உறவுனர்களிடம் இருந்து ஆதரவு கிடைக்கும். சிலருக்கு திடீரென மருத்துவச் செலவுகள் ஏற்பட்டாலும் அது சமாளிக்கும் படியாகவே இருக்கும். வியாபார சம்மந்தமான முயற்சிகள் உடனடியாக முடியாமல் சிறு கவலையைக் கொடுக்கும். அலுவலக ரீதியான பயணங்களை ஒத்திவைப்பது நல்லது. நல்லவர்களின் ஆசியை பெறுவீர்கள். பெண்களின் பயம் நீங்கும்படியான மாற்றங்கள் நிகழும். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து குடும்பத்தினரின் மனக்கசப்புக்கு ஆளாக வேண்டாம்.

ரிகாரம் : அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

புதன், சுக்கிரன், சந்திரனால் ராஜயோக பலன் உண்டு. வியாபாரத்தில் லாபத்திற்கு தேவையான சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கான சூழல் உருவாகும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழ்வதால் மகிழ்ச்சி அதிகரிக்கும். முக்கியப் பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். பழைய கடனைத் தீர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பெண்களின் எதிர்பார்ப்புகள் சற்று நிதானமாக நிறைவேறும். குடும்பத்தில் பொருளாதார விஷயமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள்.

பரிகாரம் : சிவன் வழிபாடு சிரமத்தை நீக்கும்.

சூரியன், புதன், ராகுவால் கூடுதல் நற்பலன் கிடைக்கும். மனம் தளறாமல் முயற்சிகளை தொடர்வீர்கள். அலுவலகத்தில் உங்களின் நேர்மையான நடவடிக்கையால் அனைவரையும் தன்வசப்படுத்தும் திறமை கைவரும். குடும்பத்தின் ஒற்றுமை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதால் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். பெண்கள் முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற, இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதற்கான சூழல் உருவாகும்.

சந்திராஷ்டமம் : 14.6.2020 காலை 6:00 – 16.6.2020 அதிகாலை 4:47 மணி
பரிகாரம் : சாஸ்தா வழிபாடு துன்பம் போக்கும்.

எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் வளரும். எதிர்பாராத பணியிட மாற்றங்களால் குடும்பத்தை விட்டுப் பிரியும் சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் கொள்ளவும். வியாபாரத்தில் வரவேண்டிய நிலுவைத் தொகைகள் இழுபறியில் இருக்கும். அனுபவமிக்கவர்கள் கூறும் ஆலோசனையினால் சிரமங்களைள வென்றுவிடுவீர்கள். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும். பெண்களுக்கு திருப்தியான மணவாழ்க்கை அமையும். வெளிநாட்டில் வசிக்கும் நெருங்கிய உறவினரிடமிருந்து நல்ல தகவல் வரும். தெய்வ வழிபாடு மனஅமைதி தரும்.

சந்திராஷ்டமம் : 16.6.2020 அதிகாலை 4:48- 18.6.2020 மாலை 4:01 மணி
பரிகாரம் : ராமர் வழிபாடு ஆரோக்கியம் தரும்.

புதன், சந்திரனால் கூடுதல் நன்மை விளையும். தன்னம்பிக்கையுடன் பொது நல விஷயத்தில் ஈடுபட்டுப் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்தியை பயன்படுத்தினால் மட்டுமே லாபத்தை அதிகரிக்க முடியும். எதிரிகளை நண்பர்களாக்கி கொள்வீர்கள். பெண்கள் ஆடை, ஆபரணங்களை அன்பளிப்பாக பெற்று மகிழ்ச்சி கொள்வர். தொழில் வளர்ச்சியை பெருக்கிக் கொள்ள புதிய வாய்ப்புகள் உருவாகும். சிலருக்கு வயிறு சம்பந்தப்பட்ட உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. குடும்பச் செலவுகளுக்கு எதிர்பார்த்த பணவரவு தாமதமானாலும் உங்களின் சேமிப்பு பணம் கைகொடுக்கும்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.

குரு, சுக்கிரன், சந்திரன் அமோகமான பலன் தரும் அமைப்பில் உள்ளனர். எதிர்கால நலனுக்காக திட்டமிடுவீர்கள். உங்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதால் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் இருப்பர். அறிவுத் திறன் கூடும் வகையில் பல புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படலாம். பெண்களுக்கு எப்போதும் மனதில் தேவையற்ற ஒரு கலக்கம் இருக்கும். பணியாளர்கள் சிறிய வேலையை செய்து முடிக்க சற்று அதிகமாக உழைக்க வேண்டிவரும். வியாபாரத்தில் உள்ள போட்டிகளை சமாளிப்பீர்கள். சரியான நேரத்தில் உதவும் நண்பர்களை எண்ணி பெருமிதம் கொள்வீர்கள்.

பரிகாரம் : பைரவர் வழிபாடு பல நன்மைகள் தரும்.

செவ்வாயும், சந்திரனும் சாதகமான இடத்தில் உள்ளனர். எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். தேவையற்ற வாக்குவாதத்தால் குடும்பத்தில் ஒற்றுமை குறையும். உத்யோகஸ்தர்களுக்கு வேலைப்பளு கூடுவதால் மனஉளைச்சல் அதிகரிக்கும். கலைத் துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க தாமதம் ஆகலாம். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பெண்களுக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தொழிலில் முன்னேறுவதற்கான அதிகப்படியான வாய்ப்புகள் உருவாகும். கடந்த காலத்தில் உங்களைத் தூற்றியவர்கள் போற்றுவார்கள்.

பரிகாரம் : சனீஸ்வரர் வழிபாடு சங்கடம் தீர்க்கும்.

சந்திரன், சுக்கிரன், ராகுவால் அதிர்ஷ்டகரமான பலன் கிடைக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்த பிறகே முடிவெடுக்கவும். மகளுக்கு எதிர்பார்த்த வரன் அமையும். பணவரவு அதிகரித்தாலும் அதற்கேற்றபடி செலவுகளும் கூடும். ஆழ்ந்த மனக்கவலைகள் மனைவியின் அரவணைப்பால் குறையும். குழந்தைகள் செய்யும் சேட்டைகளால் உங்கள் முகத்தில் புன்னகையும், மகிழ்ச்சியும் காணப்படும். வியாபார விரிவாக்கத்தால் லாபம் சிறப்பானதாக இருக்கும். உத்தியோகஸ்தர்களின் கடின உழைப்பு வீணாவதற்கான சூழல் உருவாகும். சகோதரியின் பொருளாதார பிரச்னைகளை சரிசெய்வீர்கள்.

பரிகாரம் : முருகன் வழிபாடு நம்பிக்கை வளர்க்கும்.

தேவையற்ற பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். புதியவரின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடுதலாக மூலதனம் செய்வது அவசியமாகும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் மிகுந்த அக்கறை கொள்வீர்கள். கலைத்துறையினர் கூடுதல் முயற்சி எடுத்தால் மட்டுமே புதிய வாய்ப்புகளை பெற முடியும். சிலருக்கு அலுவலகத்தில் வீண் பழிச்சொற்கள் உண்டாகலாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சுபச்செலவுகள் கூடும். பெண்கள் அடுத்தவர் கஷ்டங்களை புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவி செய்து நற்பெயரும், பாராட்டையும் பெறுவர்.

பரிகாரம் : விநாயகர் வழிபாடு வினை தீர்க்கும்.

என்றைக்கோ செய்த உதவியின் பலனை இன்று பெறுவீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வரலாம். குடும்பத்தில் சுபிட்சமான நிலையும், சந்தோஷமும் நிலவும். தம்பதியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறும் சூழல் உருவாகும். அலுவலகத்தில் மேலதிகாரிகளிடம் அனுசரித்துச் சென்றால் கூடுதல் நற்பலன்களை பெறலாம். மகனின் திருமண ஏற்பாடுகள் அனைத்தும் வெற்றிகரமாக அமையும்.

பரிகாரம் : தன்வந்திரி வழிபாடு தொழிலில் உயர்வு தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here