தமிழ் தேசிய மாட்டு பட்டியால் சர்ச்சை; மட்டு கால்நடை வைத்தியருக்கு இடமாற்றம்: சிங்களவர் நியமனம்!

வெல்லாவெளி பிரதேசசபை தவிசாளரின் மாட்டு பட்டிக்கு நேரில் சென்று, மாடுகளிற்கு அடையாளமிட மறுத்தார் என்பதற்காக வெல்லாவெளி பிரதேசத்திற்குரிய கால்நடை மருத்துவர் இடமாற்றப்பட முயற்சிக்கப்பட்டு வருவது குறித்த தகவல்களை தமிழ்பக்கம் பெற்றுள்ளது.

வெல்லாவெளி பிரதேசத்தில் மாட்டு பட்டிகளை வைத்திருப்பவர்கள், மங்களகம மேய்ச்சல் தரவையிலேயே தமது பட்டிகளை மேய விட்டுள்ளனர். அங்கு வெல்லாவெளியை சேர்ந்த பலரது மாட்டு பட்டிகள் மேய்ச்சலில் உள்ளன.

அந்த பகுதிக்குரிய கால்நடை மருத்துவர் துஷ்யந்தன், மாடுகளிற்கு அடையாளமிடும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். இதற்காக மாட்டு பட்டி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, மங்களகம மேய்ச்சல் தரவையில் உள்ள பொது டமொன்றிற்கு எல்லா பட்டி மாடுகளையும் கொண்டு வருவதென்றும், அங்கு வைத்து அனைத்து மாடுகளிற்கும் அடையாளமிடுவதென்றும் முடிவெட்டப்பட்டது.

இதேநேரம், வெல்லாவெளி பிரதேசசபையின் தவிசாளராக உள்ள ரஜினி (தமிழ் தேசிய கூட்டமைப்பு) என்பவரது மாடுகளும் அங்கு மேய்ச்சலில் உள்ளன. கால்நடை மருத்துவரை தனது பட்டிக்கு நேரில் வந்து அடையாளமிட வேண்டுமென தவிசாளர் வலியுறுத்தியுள்ளார். எனினும், கால்நடை மருத்துவர் அதை மறுத்து, அனைவரும் பொதுவான இடத்திற்கு மாடுகளை அழைத்து வரும்படி கூறியிருக்கிறார். இதனை தவிசாளர் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த முரண்பாடுகள் அதிகரித்ததையடுத்து, ஸ்ரீநேசன் எம்.பி, தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம் ஆகியோரிடம் தவிசாளர் முறையிட்டு, கால்நடை மருத்துவரை இடமாற்றம் செய்யும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் கிழக்கு ஆளுனரிடம் , துரைராசசிங்கம் பேச்சு நடத்தி, கால்நடை மருத்துவரை இடமாற்றும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெல்லாவெளி கால்நடை மருத்துவரை இடமாற்றம் செய்வதற்கு கிழக்கு ஆளுனரும் சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது சிங்கள பெண்ணான கால்நடை மருத்துவர் ஒருவரே, வெல்லாவெளி கால்நடை மருத்துவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

Loading...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here