கேரளாவில் உருவான கொரோனா தேவி ஆலயம்!

கேரளாவில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.கொரோனா போரில் ஈடுபடுபவர்களுக்காக வழிபாடு நடத்தப்படுகிரது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் 76 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் இப்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 424,000 பேர் உயிரிழந்து உள்ளனர்.

வல்லரசு நாடுகளே கொரோனா வைரசுக்கு நடுங்கி வருகின்றன. பணக்காரன் முதல் ஏழை வரைவேறுபாடு இன்றி அனைவருக்கும் கொரோனா ஒரு அச்சமாக மாறி உள்ளது.

கொரோனாவால் உலகம் முழுவதும் உள்ள வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டு உள்ளன. சமீபத்தில் தான் படிப்படியாக வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இருந்தும் கொரோனாவுக்கு பயந்து சமூக இடைவெளியுடன்தான் கடவுளை கும்பிட வேண்டி உள்ளது.

இந்த நிலையில் கேரளாவில் கொல்லம் மாவட்டத்தில் கொல்லம் நகரில் இருந்து 44 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கடக்கல் என்ற இடத்தில் கொரோனா தேவி ஆலயம் ஒன்று உருவாகி உள்ளது.

இந்த ஆலயத்தை அணிலன் என்பவர் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் தோற்றத்தை சிலையாக நிறுவி அதற்கு பூஜை செய்து வருகிறார்.

இது குறித்து அணிலன் கூறியதாவது:-

33 கோடி இந்து கடவுள்களுடன் கூடுதலாக மேலும் ஒரு கடவுள்.தொற்றுநோய்க்கு எதிரான போரில் ஈடுபடும் அனைவரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக நான் தெய்வத்தின் முன் பூஜைகளை நடத்துவேன். கோயில்கள் மீண்டும் திறக்கப்படுவதன் பின்னணியில் உள்ள அரசியல் பிரச்சாரத்திற்கு எதிரான போராட்டம் என்பதால் தரிசனம் இருக்காது என்பது தெரியும்.

மக்கள் இப்போது அரசியல் ஆதாயங்களுக்காக கடவுளைப் பயன்படுத்துகிறார்கள், ஆனால் இப்போது கோவில் வருகைக்கு நேரம் இல்லை. வேலை கிடைப்பது என்பது இப்போது முக்கியமானதாகி உள்ளது.

தெர்மோகால் மூலம் தயாரிக்கப்பட்டு, ‘பல்லிவல்’ மீது அமர்ந்திருக்கும் கொரோனா தேவி எந்த ‘மூலமந்திரமும்’ இல்லாத தெய்வம் ஆகும். கேரளாவில், பெரியம்மை நோய்க்கான தெய்வம் உள்ளது,

இது யாரையும் கேலி செய்யும் முயற்சி அல்ல, அனைத்து பூஜைகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யப்படும். இந்து புராணங்களின்படி, கடவுள் எங்கும் நிறைந்தவர், வைரஸில் கூட இருக்கிறார். ஒரு வைரஸை தேவி என்று வணங்குவது எங்களுக்கு ஒரு புதிய வழக்கம் அல்ல.

தரிசனம் இல்லை என்றாலும், கொரோனா தேவியின் பிரசாதம் பக்தர்களுக்கு அஞ்சல் மூலம் கிடைக்கும்.

இந்த ஆலயம் சுகாதாரப் பணியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் உள்ளிட்ட கொரோனா வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. “மற்றவர்களுக்கு உதவுபவர்களின் பெயர்களில் பூஜைகள் நடைபெறும். பிரசாதம் விரும்புவோர் என்னுடன் தொடர்பு கொள்ளலாம். பூஜைகள் மற்றும் பிரசாதங்களுக்கு நான் பணம் வசூலிக்க மாட்டேன் என்று அவர் கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here