பீடி புகைத்துக் கொண்டு நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கிய இளைஞன் எரிந்து பலி!

பீடி புகைத்துக்கொண்டு நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கிய இளைஞன், தீக்காயத்திற்குள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சுன்னாகம் கந்தரோடை பகுதியை சேர்ந்த (28) இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சுன்னாகம் கந்தரோடையில் விவசாயம் செய்து வரும் குறித்த இளைஞன் கடந்த 31 ஆம் திகதி தனது தோடடத்திற்கு நீர் இறைப்பதற்காக நீர் இறைக்கும் இயந்த்திரத்தை தோளில் சுமந்து சென்றுள்ளார்.

அப்போது இயந்திரத்தில் இருந்த மண்ணெண்ணெய் அவரது உடலில் பட்டுள்ளது. பின்னர் தோட்டத்தில் பீடி புகைத்துக் கொண்டு பெற்றோலை பயன்படுத்தி நீர் இறைக்கும் இயந்திரத்தை இயக்கி உள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. அப்போது கூக்குரல் எழுப்பியவாறு கிணத்திற்குள் குதித்துள்ளார். அவ்வாறு குதித்தவரை அயலில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று (12) உயிரிழந்துள்ளார். இந்த இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here