தமிழ் அரசு கட்சியின் தேர்தல் முன்னாயத்த கூட்டம்!

எதிர்வரும் பாராளுமன்றப் பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சிக் கிளைகளின் பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை மாலை மட்டக்களப்பிலுள்ள கட்சிப் பணிமனையில் இடம்பெற்றது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், வேட்பாளருமாகிய கி.துரைராசசிங்கம் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரோஸ்ட உபதலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ், மாநகர முதல்வர், உள்ளுராட்சி சபைகளின் தவிசாளர்கள், பிரதித் தவிசாளர்கள், உள்ளுராட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்களான மா.உதயகுமார், இரா.சாணக்கியன், கிளைகளின் பிரதிநிதிகள், வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன், வாலிபர் முன்னணி மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் லோ.தீபாகரன் உட்பட வாலிபர் முன்னணியினர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது வேட்பாளர்களின் செயற்திட்டங்கள், கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களின் கருத்துக்களும் பரிமாறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here