செய்த அட்டூழியங்களினாலேயே ஐ.தே.க காணாமல் போகும் நிலைமைக்குள்ளாகியுள்ளது!

தமிழ் மக்களுக்கான சலுகைகள் உரிமைகள் அனைத்தையும் முடக்கி தமிழ் பேசும் மக்களை பாதாளலோகத்துக்கு அழைத்துசெல்வதே ஐ.தே.க என ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளரும், வத்தளை மாபோல நகரசபை உறுப்பினரும் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற வேட்பாளருமான சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்- தமிழர்கள் கடந்த காலங்களில் யானை சின்னத்துக்கு வாக்களிக்க பழகி கொண்டிருந்ததால் அதை பயன்படுத்தி தமிழ் மக்களை அடக்கி ஆள முற்பட்டதோடு தமிழர்களுக்கு கிடைக்கவிருந்த உரிமை சலுகைகளையும் முடக்கியது.ஆனால் தற்போது நல்வர்கள் போல வேடம் தரித்து தமிழ் மக்கள் முன்பு வந்து வாக்கு அளிக்கின்றனர்.

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பது போல ஐ.தே.க செய்த அட்டூழியங்களுக்கே தற்போது கட்சியே காணாமல் போகுமளவுக்கு உருவாகியுள்ளது.வரும் காலங்களில் யானையும் இருக்காது ஐ.தே.கவும் இருக்காது.கம்பஹா மாவட்டத்தில் வரலாற்று சாதனையை படைக்க சஜீத் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி இருப்பதாக ஐக்கிய மக்கள் க்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சசிக்குமார் குறிப்பிட்டார்.

-நீலமேகம் பிரசாந்த்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here