கடந்த கால தவறுகளை மக்கள் உணர்ந்து கொண்டால் எதிர்காலம் சுபீட்சமாகும்: வடமராட்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

கடந்த காலத் தவறுகள் மக்களின் மனங்களில் பதிய வைக்கப்படுவதன் மூலமே எதிர்காலத்தில் சரியான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைதினம் வடமாராட்சி பகுதிக்கு சென்றிருந்த அமைச்சர் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் மக்களுடனான சந்திப்புக்களை முன்னெடுத்திருந்தார்.

இந்நிலையில் தம்பசிட்டி சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வட்டார ரீதியிலான செயற்பாட்டாளர்களுடன் இன்று நடத்திய சந்திப்பிலேயே குறித்த கருத்தினை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

மேலும், வடக்கு – கிழக்கு மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் மேற்கொண்ட தவறுகளையும், அது ஏற்படுத்தி இருக்கின்ற எதிர் விளைவுகளையும் மனதில் வைத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி. கட்சியின் கரங்களை வலுப்படுத்துவார்களாயின், சிறப்பான வாழ்வாதாரத்தை – கௌரவமான வாழ்கையை – நியாயமான அரசியல் தீர்வை, தேசிய நல்லிணக்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

ஆகவே, கட்சியின் செயற்பாட்டாளர்கள் அனைவரும், அரசியல் வரலாற்றில் தமிழ் மக்கள் தவறவிட்ட சந்தர்ப்பங்களையும் அதற்கான காரணங்களையும் மக்களின் மனங்களில் பதியும் வகையில் எடுத்துக் கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய ஈழ மக்கள ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரம் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்,

தமிழ் மக்களுக்கான உரிமைப் போராட்டம் மற்றும் அதனுடன் கூடிய ஏதுநிலைகளால் அதிகம் ஈர்க்கப்பட்ட பிரதேசமாக இந்த வடமராட்சி பிரதேசம் காணப்படுகின்றது. ஆனாலும் அந்த தாக்கங்களிலிருந்து இன்று எமது மக்கள் விடுபட்டு தமது எதிர்காலம் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கு முயற்சிக்கின்றனர்.

மக்களின் இந்த முயற்சிக்கு தேசியம் என்ற போர்வைக்குள் இருந்து அரசியல் செய்பவர்களால் ஒருபோதும் தீர்வுகளை கண்டுதரமுடியாது. மக்களின் எதிர்காலம் நோக்கிய பயணத்துக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரது வழிமுறையே சாத்தியமானது என இன்று இதர தமிழ் அரசியல் தரப்பினரும் ஏற்றுள்ளனர்.

அந்தவகையில் எமது வடமராட்சி மக்களிடையே மனமாற்றம் ஒன்றே அவசியமாகின்றது. அந்த மாற்றமே அவர்களது எதிர்காலத்தை வென்றெடுக்கும் சக்திகொண்டதாக அமையும். அதற்காக மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கரங்களுக்கு என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here