போராட்டம் தடுக்கப்பட்டதற்கு வாசுதேவ கண்டனம்!

அமெரிக்க தூதரகத்தின் முன்பாக முன்னணி சோசலிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தை கட்டுப்படுத்த. பொலிசார் கையாண்ட நடவடிக்கைகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவா நாணயக்கார கண்டித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று (12) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வாசுதேவ இதனை தெரிவித்தார்.

போராட்டம் நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டுமென குறிப்பிட்டார்.

பொலிஸ் மற்றும் எதிர்ப்பாளர்களுடனான மோதல் நீதிமன்ற உத்தரவின் காரணமாக இருந்தது. காவல்துறையினர் போராட்டத்தில் நுழைந்து நீதிமன்ற உத்தரவுகளின்படி செயல்பட்டனர். இதற்காக ஏன் நீதிமன்றத்தை நாடினார்கள் என தெரயவில்லை. அங்கு பொலிசாரின் நடத்தை மன்னிக்க முடியாது. இது அரசாங்கத்தின் கொள்கைக்கு ஏற்ப அங்கீகரிக்க முடியாத ஒரு செயல். வெளிவிவகார அமைச்சுடன் கலந்துரையாடி, முடிவெடுத்த பிறகு நீதிமன்றங்களுக்குச் செல்வதே சரி. இந்த விடயத்தில் அரசாங்கத்தின் கொள்கைகள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகின்றன என்று குறிப்பிடுவது அவசியம். இந்த சம்பவம் அரசாங்கத்தின் கொள்கைக்கு பெரும் சேதமாக நாங்கள் பார்க்கிறோம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here