460 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞர்கள் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியில் வெவ்வேறு இடங்களில் இருந்து 460 மில்லி கிராம் கெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தில் இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வாழைச்சேனை விசேட அதிரடிப்படைப் படையினரும் இணைந்து வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவரிடம் இருந்து 280 மில்லி கிராமும், மற்றவரிடம் இருந்து 180 மில்லிகிராமுமாக 460 மில்லி கிராம் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளும் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்வேறுபட்ட சட்டவிரோத செயல்கள் நடைபெற்று வருவதாகவும், இதனை தடுக்கும் வகையிலும், குற்றவாளிகளை கைது செய்யும் வகையிலும் பொலிஸார், விசேட அதிரடிப்படைப் படையினர் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here