கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் படுகொலை

வெலிமடை, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுகதலாவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இரட்டைமாடி வீட்டுக்குள் வைத்தே நேற்று (12) 60 வயதுடைய குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளார் என பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர் ஒரு பிள்ளையின் தந்தையாவார். குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்றிருந்த சமயம்பார்த்தே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இதன்பின்னணி என்னவென்பதை கண்டறிவதற்காக வெலிமடை பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் எவரேனும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

க.கிஷாந்தன்-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here