நீண்டநாள் கஞ்சா வியாபாரி சிக்கினார்!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடிமாஞ்சோலை பகுதியில் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவரை வியாழக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி எச்.வி.எல்.விஜயரத்ன தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவு மற்றும் மட்டக்களப்பு இராணுவ புலனாய்வு பிரிவு ஆகியோருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வவுணதீவு விசேட அதிரடிப்படை படையினரின் உதவியுடன் ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியில் ஆயிரத்து எழுநூற்றி எழுபத்தைந்து (1775) கிராம் கஞ்சாவுடன் வியாபாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வவுணதீவு விசேட அதிரடிப்படை படையினரால் கைப்பற்றப்பட்ட ஆயிரத்து எழுநூற்றி எழுபத்தைந்து (1775) கிராம் கஞ்சா மற்றும் கைது செய்யப்பட்ட கஞ்சா வியாபாரியையும் வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ஓட்டமாவடி மாஞ்சோலை பகுதியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இதற்கு முன்னரும் பல தடவைகள் கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டவர் என்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும்தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here