கொரோனா வைரசின் மூலக்கூறுகளை இஸ்ரேல் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்!

கொரோனா வைரஸின் மூலக்கூறுகளை இஸ்ரேல் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். இதன்மூலம் வைரஸை ஒழிக்கும் தடுப்பு மருந்தை விரைவில் கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

சீனாவின் வூஹான் நகரில் பரவி, இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தி விட்டது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல நாடுகளும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில், மத்திய இஸ்ரேலில் உள்ள ‘பார் இலன் யுனிவர்சிட்டி’ (பிஐயூ) ஆராய்ச்சியாளர்கள், கொரோனா வைரஸின் மூலக்கூறுகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் விரைவில் தடுப்பூசியையும் கண்டுபிடித்து விடலாம் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

ஆன்டிஜென், அன்டிபொடி, எபிடோப்ஸ், வைரஸில் உள்ள புரோட்டீன் போன்றவற்றின் செயல்பாடுகளை வைத்து அதற்கான எதிர்ப்பு சக்திகளைத் தரும் தடுப்பு மருந்துகளைக் கண்டுபிடிக்க வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை ‘எம்டிபிஐ வேசின்ஸ்’ என்ற அறிவியல் இதழில் கடந்த வியாழக்கிழமை வெளியானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here