இலங்கையில் பதிவு செய்யப்படாத நிலையில் ஆயிரத்திற்கும் அதிகமான நிதி நிறுவனங்கள்!

மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத அனைத்து நிதி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் சட்டவரைவு, நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டும், சில வருடங்களாக அது கிடப்பில் இருக்கிறது.

மத்திய வங்கியின் ஆளுனர் டபிள்யூ.டி லக்ஸ்மன் இதனை தெரிவித்துள்ளார்.

கொரொனா பாதிப்பையடுத்து பலவகைப்பட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வாகனங்களின் குத்தகை பணம் செலுத்துவதில் அரசு நிவாரணம் வழங்கியிருந்தது. முச்சக்கர வண்டிகளின் குத்தகை பணம் செலுத்துவதிலும் 6 மாத நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது.

எனினும், அரசாங்கத்தின் உத்தவை பொருட்படுத்தாத நுகோகொடவை சேர்ந்த நிதி நிறுவனமொன்று குத்தகை பணம் செலுத்தாத ஒருவரின் முச்சக்கர வண்டியை அடாவடியாக பறித்தது. பாதிக்கப்பட்டவருக்காக நியாயம் கேட்க சென்ற, முச்சக்கர வண்டி சாரதிகள் சங்க தலைவர் பிரசன்ன ஜயவர்த்தன அடித்துக் கொல்லப்பட்டிருந்தார்.

இந்த நிதி நிறுவனம் மத்திய வங்கியில் பதிவு செய்யப்படாத நிதி நிறுவனமென்ற தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மத்திய வங்கி ஆளுனர் தெரிவிக்கையில்,

கண்டியிலிருந்து கொழும்பு வரையான பகுதிகளில் வீதியோரங்களில் பதிவு செய்யப்படாத 1,000 இற்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் இயங்குகின்றன.

இந்த நிதி நிறுவனங்கள் பற்றி மத்திய வங்கிக்கு அறிவித்தாலும், நடவடிக்கையெடுக்க தற்போதைய நிலையில் சட்ட ஏற்பாடுகளில்லை. பதிவு செய்யப்படாத நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்தும் சட்ட வரைபொன்று சில வருடங்களின் முன்னர் மத்திய வங்கியினால், நிதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here