தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்கள் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கான கலந்துரையாடல் இன்று மாலை மாட்டீன் வீதியில் உள்ள தமிழ் அரசு கட்சியின் தலைமை செயலகத்தில் இடம்பெற்றது.

தமிழ் அரசுக் கட்சியில் 7 வேட்பாளர்களும் புளொட் அமைப்பின் 2 வேட்பாளர்களும், ரெலோவின் ஒருவருமாக- கூட்டமைப்பின் 10 வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

குறித்த கலந்துரையாடலில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் அதற்கான பரப்புரைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது அதிக ஆசனங்களை பெறும் வகையில் செயல்படும் வழிவகைகளும் தற்போதைய கொரோனா அச்ச சூழலில் சுகாதார வழிவகைகளுடன் சந்திப்புக்களை மேற்கொள்வது தொடர்பாகவும் பிரஸ்தாபிக்கப்பட்டது.

கூட்டத்தில் தமிழ் அரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.எக்ஸ்.குலநாயகம் உள்ளிட்ட சில கட்சியின் மூத்த செயல்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here