பணிப்பெண்ணிற்கு 1 மில்லியன் ரூபா… கொரொனா தடுப்பிற்கு 5 இலட்சம் ரூபா: கொழும்பில் தற்கொலை செய்தவர் எழுதிய கடைசி கடிதம்!

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் தனக்குத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்தவர் கொழும்பு ரெலிகிராப் பத்திரிகையில் சுயாதீன பத்திரிகையாளராகவும், தொழிலதிபராகவும் செயற்பட்ட ரஜீவ ஜெயவீர (64) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மைக்ரோ பிஸ்டல் ஒன்றினால் தனக்குத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதிய கடிதமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

அதில், தனது சகோதரரிடம், இந்த முடிவிற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.

தனது பணிப்பெண்ணின் வாழ்க்கையை கவனிக்க அவரது வங்கிக்கணக்கில் ஒரு மில்லியன் ரூபாவை வைப்பிலிட்டுள்ளார். கொரோனா தடுப்பு ஜனாதிபதி செயலணிக்கு அவர் 5 இலட்சம் ரூபா வைப்பிலிட்டுள்ளார்.

அவர் இலங்கை எயார்லைன்ஸின் முன்னாள் பயண மேலாளராகவும் செயற்பட்டுள்ளார்.

அவர் தற்கொலைக்கு பயன்படுத்திய கைத்தப்பாக்கியை 151,500 ரூபாய்க்கு வாங்கியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here