சிகிச்சை பலனின்றி குடும்பப்பெண் உயிரிழப்பு!

வடமராட்சி கரணவாய் செல்வா புரத்தை சேர்ந்த வினோதன் பரமேஸ்வரி தங்கா (40) என்ற மூன்று பிள்ளைகளின் தாய் சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் கட்டி இருப்பதாக குறிபபிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் கடந்த 02ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியர்களின் பரிசோதனை செய்யப்பட்டு நீரிழிவு இருப்பதாக குறிப்பிட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. கடந்த 10ஆம் திகதி அதிகாலை ஐந்து மணிக்கு சத்திர சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை முடிவடைந்ததும் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here