வவுனியாவைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து விடுவிப்பு

மின்னேரிய இராணுவ முகாமில் வவுனியாவை சேர்ந்த 7 பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (12) காலை வவுனியா பொலிஸ் நிலையத்தினூடாக விடுவிக்கப்பட்டுள்ளனர் .

மின்னேரிய இராணுவ முகாமில் இந்தியாவிலிருந்து வருகை தந்தவர்கள் உட்பட வவுனியாவை சேர்ந்த 7 பேர் கொவிட் 19 கொரோனா நோய் தொற்று காரணமாக கடந்த 14 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்கள் இன்றைய தினம் அவர்களது தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வவுனியா பொலிஸ் நிலையத்தின் ஊடாக வதிவிடங்களை உறுதிப்படுத்திய பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here